NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – பங்களாதேஷ் இடையே புகையிரத சேவை ஆரம்பம்!

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான புதிய புகையிரத சேவையை பிரதமர் மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நேற்று (01) ஆரம்பித்து வைத்துள்ளனர். 

நேற்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் காணொளி மூலமாக ஆரம்பித்து வைத்துள்ளனர். இதில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மூன்று வளர்ச்சித் திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இதில், அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை புகையிரத இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக புகையிரத பாதை மற்றும் பங்களாதேஷின் ராம்பாலில் உள்ள மைத்ரீ சுப்பர் அனல் மின் நிலையத்தின் அலகு 2 ஆகியவை ஆகும்.

அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை புகையிரத இணைப்பு ஒரு வரலாற்று தருணம்,இது வடகிழக்கு மற்றும் பங்காளதேஷிற்கு இடையிலான முதல் புகையிரத இணைப்பு, இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவின் உதவியுடனான வளர்ச்சி திட்டங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles