இந்தியா – பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து, கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் ஏராளமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 13 ஆம் திகதி ஆரம்பமாகிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து தினமும் இலட்சக் கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
அதற்கமைய, இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உத்தரபிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளாஇ 45ஆவது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் நிறைவுபெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டிஇ நிறை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுவதோடுஇ கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள்இ பூஜைகளும் நடைபெறுகின்றது.