இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஷல்கி என்ற நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நேற்று வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, கப்பலின் கட்டளைத்தளபதி ராகுல் பட்னைக் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத்தளபதி சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த கப்பல் 64.4 மீட்டர் நீளமுடையதுடன மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேருடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் என அதன் கட்டளை தளபதி ராகுல் பட்னைக் தெரிவித்துள்ளார்.