இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கனியவளத்தை பரிமாறிக்கொள்வதற்காக குழாய் ஒன்றை அமைப்பதற்கான மூலோபாய முதலீட்டிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன் திட்டமிடப்பட்ட பயணத்தின் பின்னணியில் இலங்கைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.சீனக் கப்பலின் வருகை குறித்து இந்தியா முன்னதாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஷி யான் 6 கப்பலை நாட்டிற்கு வர அனுமதிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
.