NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் – துரை வைகோ வேண்டுகோள்

இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண, கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 500 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் 320க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பி தராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles