இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக இருப்பதுடன் இலங்கை மக்களுக்காக 2.4 பில்லியன் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
அத்தோடு இந்திய வாழ் இலங்கையர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் இரு நாட்டு கூட்டு ஊடக சந்திப்பின் போதே பிரதம் மோடி இதனைத் தெரிவித்தார்.