NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய விஜயத்துக்கு முன்னர் சம்பந்தன் தலைமையிலான குழு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

அதற்கமைய, இச்சந்திப்பின் போது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாகவும், குருந்தூர் மலை விவகாரம் உட்பட அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்

எனவே, தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதுடன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.

இதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வலியுறுத்தவேண்டும் என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தனித்தனியாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles