NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேசியா மண்சரிவில் சிக்கி 14 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்ததுடன் மூவர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று(14) தெரிவித்துள்ளனர்.

தெற்கு சுலவேசி மாகாணத்தின் டாரா டொரஜா மாவட்டத்திள்ள மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம்(13) இரவு ஏற்பட்ட மண்சரிவு 4 வீடுகளைச் சூழ்ந்தது. மகலே, தெற்கு மகலே ஆகிய தொலைதூர கிராமங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இராணுவ வீரா்கள், பொலிஸார், தன்னாா்வலா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த இரு கிராமங்களிலிருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.தொலைத்தொடா்பு கம்பங்கள் சரிந்தது, மோசமான வானிலை, உறுதியற்ற நிலப்பரப்பு ஆகியவற்றால் மீட்பு பணி தொய்வடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Share:

Related Articles