NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு.

இந்தோனேசியா – சுலவேசி தீவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடுவதற்கான தேசிய மீட்புக் குழு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அடங்கிய 164 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குறித்த பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதன் காரணமாக மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Share:

Related Articles