உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் வெப்ப அலை அதிகூடிய அளவில் பதிவாகியுள்ளது.
இதனால் கோடைக்காலத்தில் இந்தியா எங்கும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்ப அலையின் தாக்கத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதில், வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து இந்திய பெறுமதிப்படி 4 இலட்சம ரூபாய்; நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.