NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இனி ஆசிரியர்கள் தேவையில்லை : AI போதும்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இதனை உண்மையாக்கும் வகையில் உள்ளது. சாட்ஜிபிடி சேவையின் திறன்களை கொண்ட ஏஐ சாட்பாட் ஒன்றை கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு ஆசிரியராக நியமனம் செய்ய ஹார்வார்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டு வரும் tpரிவுரையாளர்கள், ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 3.5 அல்லது ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்

கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஏஐ சாட்பாட் டீச்சர் செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட இருக்கிறது.

கணினியியல் துறையின் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு ஏஐ சாட்பாட் 1:1 ஆசிரியர்: மாணவர் வீதம் வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு இது தொடர்பான மென்பொருள் டூல்கள் வழங்கப்பட இருக்கிறது. இவை 24/7 நேரமும் பயன்படும் என்பதோடு, மாணவர்களுக்கு சிறப்பாகவும் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles