NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இனி இறந்தவர்களுடனும் பேசலாம்!

பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயம். அந்த வகையில் அன்புக்குரியவர் ஒருவரின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதுதான். எனவே இல்லாதவர்களின் இடத்தை AI தொழில்நுட்பத்தின் மூலம் நிரப்ப முடியும் என கூறப்படுகிறது.

அந்தவகையில் சிரியாவை சேர்ந்த நடிகையொருவர், திடீரென தனது தாயை இழந்துள்ளார். அந்த சோகத்தை நிவர்த்தி செய்ய, ‘ப்ரோஜெக்ட் டிசம்பர்’ எனும் AI அடிப்படையிலான போட் அமைப்பின் மூலம் தாயின் பிரிவுத் துயரிலிருந்து சற்று வெளியில் வந்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறித்த பெண், தனது தாய் இறந்த சோகத்திலிருந்து தான் கொஞ்சம் மீண்டதாகவும் சில சமயங்களில் அது பயமுறுத்துவதாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

சுமார் நான்கு வருடங்களாக தாயின் இழப்பை தாங்க முடியாமல் தவித்த குறித்த நடிகை டிசம்பர் திட்டம் என்ற திட்டத்தை கேள்விப்பட்டுள்ளார். அந்தத் திட்டத்தில் தனது விபரங்கள் மற்றும் தனது தாயின் விபரங்களை ஒன்லைன் படிவத்தில் நிரப்பியுள்ளார்.

இந்நிலையில் தாயுடன் பேச விரும்பிய நடிகையின் அனைத்து பதில்களும் OpenAIஇன் GPT2 பதிப்பால் இயக்கப்படும் AI சாட்போட்டுக்கு சென்றுள்ளது. AIகருவியானது குறித்த நடிகையின் தாயின் சுயவிபரத்தை உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.

$10 செலவில் சுமார் ஒரு மணிநேரம் Chatbotக்கு செய்தி அனுப்பலாம்.

இவ்வாறிருக்க தாயுடன் பேசியதைப் போலவும் சில சமயங்களில் வேறு யாரோ பதிலளித்தது போலவும் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தாய் அழைப்பதைப் போல செல்லப் பெயரில் தன்னை சாட்போட் அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற சில வேளைகளில் ஒருவருக்கு ஆறுதலைக் கொடுக்கும் விதத்திலும் AI செயல்படுவதால் இதன் சேவைகள் அதிகரித்து வருகின்றன.

Share:

Related Articles