NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – ‘Beat Plastic Pollution’

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும்.

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடி’ என்பதாகும்.

சுற்றுசசூ10ழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கியுள்ளனர். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

மரங்கள் இல்லையெனில் வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில்; கடும் வறட்சி, கடும் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இதுபோன்ற ஆபத்துக்களை எடுத்துரைக்கவும், அதைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்தவும்தான் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்தாண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, ஆண்டுதோறும் 400 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் நுழைந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனை அடிப்படையாக கொண்டு இந்தாண்டின் கருப்பொருளாக ‘Beat Plastic Pollution’ என்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Share:

Related Articles