NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று உலக நிலவு தினம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று உலக நிலவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ‘நாசா’ 1969 ஜூலை 16ல் அனுப்பிய அப்பல்லோ-11 விண்கலம் நிலவுக்கு சென்றது.

இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ரோங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர்.

இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது.

விண்கலத்தில் இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ரோங் சாதனை படைத்தார். இத்தினத்தை உலக நிலவு தினமாக ஐ.நா சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.

Share:

Related Articles