NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று கலப்பு சூரிய கிரகணம்!

இன்று சூரிய கிரணம் இடம்பெற்று வருகிறது.

இது கலப்பு சூரிய கிரகணம் என அழைக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம், முழு சூரிய கிரகணத்திலிருந்து வளைய சூரிய கிரகணமாக மாறுவதே இதற்கு பொருள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரகணத்தின் பாதையில் உலகின் சில பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தையும், ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் வளைய கிரகணத்தையும் காண்பார்கள்.

இலங்கையின் நியம நேரப்படி காலை 7.04 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் சூரிய கிரகணம் தொடங்கி பசுபிக் பெருங்கடலில் மதியம் 12.29 மணிக்கு முடிவடையும். எனினும் இந்த சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாது.

மேற்கு அவுஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசிய தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தை உலக மக்கள் தொகையில் 8.77 சதவீதம் பேர் மட்டுமே பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles