(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று மற்றும் நாளை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும், அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் முன்னராக அறிவிக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற வேலைத்திட்டத்திற்கு கால அவகாசம் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்த விடுமுறையை அறிவித்ததாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் தெரிவித்திருந்தார்.