NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை – வர்த்தமானி வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் பல துறையினருக்கு இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles