கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கரையோர புகையிரத வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(09) முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (11) வரை மூன்று நாட்களுக்கு இது அமுல்படுத்தப்படும்.
இதன் காரணமாக கரையோர வீதியில் புகையிரத போக்குவரத்து சேவை தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.







