NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற புதிய நடைமுறை…!

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று முதல் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

அடுத்த வருடம் முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles