NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று விண்ணில் பாயும் ஆதித்யா L- 01…!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமனா இஸ்ரோ (ISRO) குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறது.

சந்திரனின் தென் துருவத்தினை அடைந்த முதல் விண்வெளி நிறுவனம் என்ற வரலாற்றைப் படைத்த 10 நாட்களுக்குள், இஸ்ரோ ஆதித்யா-எல் 1 சோலார் ஆய்வை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.

இந்த ஏவுதல் இன்று (02.09.2023), காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 ஆனது போலார் விண்வெளி லாஞ்ச் வெஹிக்கிள் மீது ஏவுவதற்கு முதன்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இது சந்திரயான்-3 போன்ற ஒரு பாதையைப் பின்பற்றும் எனவும் ஆரம்பத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் வேகத்தை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் பாதையை மாற்றி சூரியனை நோக்கிய பாதையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1 திட்டமானது சூரிய ஆராய்ச்சிக்கான இந்தியாவின் முன்னோடி விண்வெளி பயணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரியன் – பூமிக்கு இடையிலான முதல் லாக்ரேஞ்ச் புள்ளியைச் சுற்றி ஒரு நிலையான சுற்றுப்பாதையை அமைப்பதே இதன் நோக்கமாகும் என இஸ்ரோ கூறியுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில்,

சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொக் ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://shorturl.at/flmOW
Share:

Related Articles