NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று வெளியாகவுள்ள இரு தேர்தல் கொள்கை பிரகடனங்கள்!

மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

இன்று காலை 10.30க்கு நுவரெலியா மாவட்டம், வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் குறித்த பிரகடன் வெளியிடப்பட உள்ளதாக அரங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேஷ்குமார் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அர்த்தமுள்ள பிரஜைகள் எனும் தலைப்பில் தேசிய, மலையக விடயப்பரப்புகளை உள்ளடக்கியதான இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று மொழிகளிலும் உள்ளடக்கங்ளைக் கொண்டுள்ளது.

மலையக மண்ணில் இடம்பெறும் வெளியீட்டை எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் பகிரங்க விவாத மேடையிலும். 10ஆம் திகதி அரசாங்க ஊடகத் தகவல் நிலையத்தில் இருந்து நேரலையாக நாட்டு மக்களுக்கு வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டு தௌவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின், நாமலின் தொலைநோக்குத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 160 ஆசனங்களையும் 13 ஆயிரத்து 268 வாக்களிப்பு நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles