R.M Sajjath
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றதுடன், பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றைய வானிலை தொடர்பான தகல்களோடு இணைந்துகொள்கிறார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் ……..
Weather_Voice
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லாபுகமவிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், மழையுடனான வானிலையால் 4 மாவட்டங்களிலுள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, இங்கிரிய, மதுகம, வலல்லாவிட்ட, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும், பாலிந்துநுவர பிரதேச செயலக பிரிவுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, யடியன்தோட்ட, தெரணியகல, புலத்கொஹ_பிடிய, தெஹியோவிட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, கீரிஎல்ல, அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும், எஹெலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காலி மாவட்டத்தின் பத்தேகம, எல்பிடிய, நாகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.