நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்,சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று (03) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடிய சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.