அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது சீன ஜனாதிபதியை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரின் ஜீன்-பியர்
தெரிவித்துள்ளார்.
மேலும் ”ஜோ பைடன் இந்த சந்திப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கும் என நினைக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.