பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பிடியாணைப் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 11 ஆம் திகதி இம்ரான் கானுக்கு விசாரணை குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இம்ரான் கான் அதனைப் புறக்கணித்ததன் காரணமாக அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.