NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பு..!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள்  இன்று திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தெரிவிப்பு மாவட்டத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 721 குடும்பங்களைச்சேர்ந்த  2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். இதனைவிட சிறிய குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அர்த்த நிலைமையை எதிர்கொண்டால் 0212285330

0760994885 கொண்டு தமக்கான உதவியினைப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Share:

Related Articles