NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுடன் மூவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிகரெட் தொகையுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மருதானை பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

அதன்போது, தீர்வை வரியின்றி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு 120000 சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர்கள் மூன்று பேர் கைதாகினர்.

மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் சிகரெட்டுக்களை பல இடங்களில் விற்பனை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles