பிரித்தானியாவின் பணவீக்கம் 02 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த நிலையில் முதன்முறையாக மூன்று வருடங்களுக்கு பின்னர், தற்போது பணவீக்க இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஜூன் முதல் பணவீக்கம் ஓரளவு மீண்டு வருவதாக தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் Paula Bejarano Carbo தெரிவித்துள்ளார்.
மேலும் லேபர் கட்சியின் துணை தலைவர் ரேச்சல் ரீவ்ஸ், குறைந்த பணவீக்க எண்ணிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் மக்கள் இன்னும் போராடி வருவதாகவும், பணவீக்கம் உயரத் தொடங்கிய கடந்த 2021 ஆம் ஆண்டை விட விலைகள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.