இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்தில், அசிட் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அசிட் தாக்குதலில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இரத்தினபுரி சமன் தேவாலய பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான வழக்கிற்காக பிரசன்னமான பிரதான சந்தேகநபரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் சந்தேகநபர், சந்தேகநபரின் மனைவி, நண்பர் ஒருவர் மற்றும் அருகிலிருந்தத மேலும் இருவர் அசிட் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் தந்தையே, அசிட் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்