லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த தோட்டத்துக்குச் சொந்தமான இல்லம் தோட்ட நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த இல்லம் நேற்று ஹட்டன் தோட்ட நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1987ஆம் ஆண்டு அரவிந்தகுமார் ஹென்போல்ட் தோட்டத்தில் பிராதன எழுதுவினைஞராக பணிபுரிந்தபோது குறித்த இல்லம் அவருக்குத் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது.
அரவிந்தகுமார் தோட்டத்தை விட்டு வெளியேறியதன் பின்னரும் குறித்த இல்லத்தை அவர் தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்காது அதனைப் புனரமைத்து அவரது பொறுப்பிலேயே பராமரித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, தோட்ட நிர்வாகம் அரவிந்தகுமாருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.