NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவ உயர் அதிகாரியின் வாகனத்துடன் 7 வாகனங்கள் அணிவகுப்பு – அணிவகுப்புக்கு பணம் வழங்கியது யார்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் 7 வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விரக்கொடி பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு வந்த போது இந்த வாகன அணிவகுப்பு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் இல்லாத வேளையில் இராணுவத் தளபதி ஒருவருக்கு அணிவகுப்பு செல்வதற்கு இவ்வாறு பணம் வழங்கியது யார் என்ற தகவலை வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Share:

Related Articles