NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவ லொறி இரு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு..!

பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்தவிற்குள் நுழையும் வளைவு பகுதியில் இன்று (10) விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், வீதியருகில் இருந்த சுவருக்கும் இராணுவத்தின் லொறி இடையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles