பாராளுமன்றம் மற்றும் அதற்கு வெளியிலும் பெண்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 8 பாராளுமன்ற அமர்வுகளில் ஆற்றும் உரைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என சபாநாயகர் பாராளுமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.