NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் மாயம்!

மின்னேரியா மற்றும் வக்கமுல்ல பகுதிகளில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அப்பகுதிகளுக்கான பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மின்னேரியா குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற 37 வயதான அத்துரலிய, யஹலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, வக்கமுல்ல, வீரகெடிய, ஊருபோகுஓயே அணையின் மீது நடந்து சென்ற 40 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இவர் வக்கமுல்ல, ஹகுருவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Share:

Related Articles