டெல்லியில் இரு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மிரட்டலை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 6 மணியளவிலும், அதனை தொடர்ந்து 7 மணிக்கும் பஸ்சிம் விஹார் பகுதியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.
இந்நிலையில், தீயணைப்பு துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றிய நிலையில் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, டெல்லியில் மேலும் சில பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லியை சூழ பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.