NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரு வாரங்களில் முட்டை விலை குறையும்?

யார் பந்தயம் கட்டினாலும் அடுத்த இரண்டு வாரங்களில் முட்டையின் விலை குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜா-அல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டுக்குத் தேவையான முட்டைகள் சந்தைக்கு வருவதில்லை. அதனால்தான் அதிக அழுத்தத்தையும் மீறி முட்டையை இறக்குமதி செய்தோம். பொதுப்பணித்துறையில் சிலர் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு சாதகமாக இல்லை. எனவே, மக்களுக்கு தேவையான முடிவுகளை எடுக்கும்போது, சில தடைகளும் ஏற்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles