இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உள்ளூர் விவசாயியைப் பாதுகாக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை அமுல்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும், எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட விதிகளின் கீழ் அதை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.