NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறக்குவானை பிரதேசத்தில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இறக்குவானை பிரதேசத்தில் 22 யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

23 வயதான இளைஞனின் காதலி எனக்கூறப்படும் குறித்த யுவதி, விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அவரது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறக்குவானை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன், தனது காதலி என்று கூறப்படும் உயிரிழந்த யுவதியுடன்,இறக்குவானை – பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு தங்கியதாக இறக்குவானை பொலிஸரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த இளைஞன் தனது காதலியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு கொண்டு வருவதற்காக வெளியே சென்று, திரும்பி வந்து பார்த்தபோது தனது காதலி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டதாகவும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, ஊழியர்களின் உதவியுடன் யுவதி காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு யுவதியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Related Articles