ஜப்பானிய நகரங்கள் சில இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலிலிருந்து எஞ்சிய உலோகங்களை விற்று பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டி வருகிறது.
ஜப்பான் நாட்டின் சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதிலிருந்து எஞ்சிய எலும்புகளை மாத்திரமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்நாட்டு மக்கள் தங்களின் பற்களை அடைக்க தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களைப் பயன்படுத்துவதால் அந்த உலோகங்களின் எச்சங்களும், எழுப்புகளில் இம்பிளாட் ஆகப் பொருத்தப்பட்டிருக்கும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும் சாம்பலில் அதிகம் எஞ்சுகின்றன.
இதனூடாக, பல்வேறு ஜப்பானிய நகரங்கள் அதைச் சேகரித்து விற்று சம்பாதிக்கின்றன.
ஜப்பானில் 97% சதவீத மயானங்களை அரசே நடத்தகுவதால் இதன் மூலம் பெரு நகரங்கள் அதிக இலாபம் ஈட்டுகின்றன.
அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் வரை அந்த நகரங்கள் சம்பாதித்துள்ளன.
மேலும் ,குறிப்பாக கியோடா நகரம் 303 மில்லியன் யென், யோகோஹாமா நகரம் 233 மில்லியன் யென், நகோயா நகரம் 225 மில்லியன் யென் சம்பாதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.