50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருவரும் நிலையில், இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அவுஸ்திரேலியா அணி தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.