NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதி கட்ட தேர்தல் பிரசார பணிகள் தீவிரம் – 18ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதிகாலம்!

ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை மறுதினம் நள்ளிரவுடன் நிறைவுபெறவுள்ளன.

இந்நிலையில் இறுதி பிரசாரக் கூட்டத்தை பிரம்மாண்டாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்கள் அனைவரும் கடைசி கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு மாநகர எல்லையை மையப்படுத்தியதாக அமையவுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு உளவு அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிரமாக செயற்பட்டுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்களில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மாலை 6 மணி முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

Share:

Related Articles