NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபடியாக விராட் கோலி 117 ஓட்டங்களை பெற்றதுடன், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி 398 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 327 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறியரியது.

Share:

Related Articles