NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘குழந்தைகள் முழுமையான திறனை அடைவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி அவசியம்’ – சச்சின் டெண்டுல்கர்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 

அந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் இந்த விஜயத்தின் போது UNICEF அமைப்பினால் இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்திற்காக விஜயம் செய்ததோடு, கொவிட்-19 வைரஸ் தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி என்பவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்திருந்தார்.

இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சி பெறுகின்ற நிலையில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 3.9 மில்லியன் மக்கள் போதிய உணவு வசதிகள் இன்றி சிரமப்படுவதோடு, சுமார் 4.8 வரையிலானோர் கற்பதில் இன்னல்களை எதிர்கொள்வதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது.

UNICEF நிறுவனத்தின் அனுசரணையோடு சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மதிய உணவுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிகளுக்கும் சச்சின் டெண்டுல்கர் களவிஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உணவு உற்பத்தி திட்டமானது முன்பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்கும் உதவுகின்றது.

குழந்தைகள் தங்கள் முழுமையான திறனை அடைவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி என்பன அவசியமாகின்றன. அவர்களின் கல்லி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்வதன் மூலம், அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் முதலீடு செய்கின்றோம் என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தொடக்கம் UNICEF அமைப்பு மூலம் நாடு முழுவதிலும் 1400 பாடசாலைகளில் 50,000 இற்கும் அதிகமான முன்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles