NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர்!



உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசிய வெளிவிவகார அமைச்சர் ஸம்ப்ரி அப்துல் காதிர் இன்று (08) இலங்கை வருகை தரவுள்ளார்.


குறித்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் நாளை (09) இடம்பெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சர் ஸம்ப்ரி அப்துல் காதிர் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரிகள் குழு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles