NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை அணியால் பங்களாதேஷிற்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு…!

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kamindu Mendis 37 ஓட்டங்களையும், Kusal Mendis 36 ஓட்டங்களையும்,  Angelo Mathews 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சாரபில் Taskin Ahmed, Mahedi Hasan, Mustafizur Rahman, Soumya Sarkar ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதற்க​மை பங்களாதேஷ் அணிக்கு 166 ஓட்டங்கள் பெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles