கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது . இந்த திருத்தத்தின் ஊடாக மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது, என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி ”பீட்டர் புவர் ”தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறியிருந்த அவர் நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலைபபொறிமுறைமையொன்று காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இம் முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனசர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி ”பீட்டர்புவர்”தெரிவித்துள்ளார்.