ரஷ்யா மற்றும் உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயமானது இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இந்த விசேட தூதுக்குழுவுக்கும் மற்றும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெறவுள்ளதாகவும் அத்தோடு இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.