இலங்கையை பொறுத்தவரை வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோயாளர்களை அடையாளம் காண்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் பரவி வரும் புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது
இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுகின்றனர்.அவ்வாறு பதிவாகும் பெரும்பாலான புற்றுநோயாளர்கள் வாய் மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே மரண வீதக்த்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் , எனவே, இவற்றை ஒட்டு மொத்தமாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் சுமார் 19 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.