அவுஸ்திரேலிய யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
எனினும், அவுஸ்திரேலிய நிறுவனம் அதன் செயற்;பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.