NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி!

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை பச்சை மிளகாயைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மாட்டுப் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவிக்கின்றார். 

Share:

Related Articles